Categories
அரசியல்

“அடேங்கப்பா!”…. “நாட்டில் பசியை ஒழிங்க, உண்மையை ஒழிக்காதீங்க”…. குடியரசு தலைவர் உரையை கிழித்த எம்.பி….!!!

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர், குடியரசுத் தலைவரின் உரை தொடர்பில் பல விமர்சனங்களை கூறியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரை தொடர்பில், பல கேள்விகள் எழுப்பியிருக்கிறார். மதுரையின் எம்.பியான சு.வெங்கடேசன், 75-ஆவது வருட சுதந்திர தினம்  கொண்டாடப்படும் நேரத்தில், அடுத்த 25 வருடங்களில் புது அடித்தளம் அமைக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர் உரை கூறுகிறது.

75 வருடங்களாக அமைக்கப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதா இதன் அர்த்தம்? என்று கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், குடியரசுத்தலைவர் உரையானது, தடுப்பூசி திட்டம் குறித்து பெருமையாக கூறியிருக்கிறது.

எனினும், 20% தனியாருக்கு கொடுத்துவிட்டு 4% கூட நாங்கள் செலுத்தவில்லை என்று தங்களது கொள்கை தோல்வியடைந்ததை பற்றி ஒரு வரியாவது கூறியிருக்கலாமே? பட்டினி உயிரிழப்புகள் 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு அழித்துவிட்டோம் என்று கூறுகிறார்களா? அப்படி ஒழிக்கப்பட்ட இந்தியா, உலக பசி குறியீட்டில் 116 நாடுகளில் 102 ஆவது இடத்தில் இருக்கிறது.

உலகின் வளர்ச்சி குறைவான, எடை குறைந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இங்கு தான் இருக்கிறது. பசியை ஒழியுங்கள், உண்மையை ஒழிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் 5 ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று பெருமை வேறு கூறுகிறார்கள்.

உங்கள் கைகளில் இருக்கும் பிஎஸ்என்எல் 4G-க்கு அனுமதி கொடுக்குமாறு எத்தனை வருடங்களாக போராடுவது? எதற்காக இந்த தாமதம்? பிரதமரின் புகைப்படத்தை விளம்பரத்தில் போட்டவர்களுக்காகவா? என்று கேட்டிருக்கிறார். மேலும், விமான தளத்தின் மேம்பாடு தொடர்பில் அறிக்கை கூறுகிறது.

மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு மட்டும் எதற்கு இவ்வளவு மன தடை? தமிழ்நாடு என்றாலே புறக்கணிப்பு என்று தான் அர்த்தமா? மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களே! வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி சுருங்கும் வரைக்கும், உண்மைக்கும் உங்களுக்குமான இடைவெளி நீடிக்கத்தான் செய்யும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |