சாலையோரம் இருந்த வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடு மீது மின்சாரம் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கைலாசபுரத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவரின் பசுமாடு சாலைப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த மின் கம்பத்தை தாங்கிப் பிடிப்பதற்காக அமைத்திருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து இந்த கம்பி பசுமாடு மீது உரசிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதன்பின் அருகில் இருந்தவர்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.