சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கள்ளப்பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணையில் வாலிபர்கள் தென்னங்குடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேகர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.