சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தையாபுரம் பஜார் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் மடத்தூர் பகுதியில் வசிக்கும் பச்சம்மால் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பச்சம்மாலை கைது செய்ததோடு அவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் மற்றும் ரூ.200-யையும் பறிமுதல் செய்தனர்.