சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் இருவர் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகிய இருவாரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.