Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணவே கூடாது… அதிகரிக்கும் வாகன விபத்துகள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முக்கிய இடங்களான ஒலக்கூர், கல்லூரி சாலை சந்திப்பு, ஓங்கூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது விபத்துகளை தடுப்பதற்காக இன்னும் அதிக எண்ணிகையிலான பேரி கார்டுகள் வைத்து கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த ஆய்வின் போது   துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், கலெக்டர் அமீத், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பலர் இருந்தனர்.  இதனையடுத்து வாகனங்களை அதிவேகமாக இயக்குவதாலும், மது குடித்துவிட்டு ஓட்டுவதாலும் விபத்துகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்துகளை குறைப்பதற்காக மது குடித்து வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Categories

Tech |