Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை புகழ்ந்த மாதவன்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு…. யாருன்னு பாருங்க….!!

பிரபல நடிகரை மாதவன் புகழ்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இந்த படம் தற்போது  ஹிந்தி ரீமேக்கில் உருவாகி வருகிறது.

R Madhavan 'totally Blown' After Visiting Sets Of Hrithik Roshan-starrer  Vikram Vedha

இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரமாக சயிப் அலிகானும், விஜய்சேதுபதி கதாபாத்திரமாக கிருத்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் மாதவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் விக்ரம்வேதா ஹிந்தி படப்பிடிப்பிற்கு யார் வந்து இருக்கிறார் பாருங்கள் என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த மாதவன், ”அவர் உலகை ஆளப் போகிறார் போல் தெரிகிறது. என்ன ஒரு அணுகுமுறை பாருங்கள்” என்று ஹிருத்திக் ரோஷனை புகழ்ந்துள்ளார்.

Categories

Tech |