Categories
சினிமா தமிழ் சினிமா

விஞ்ஞானியுடன் பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்…. வெளியான புகைப்படம்…!!

விஞ்ஞானியுடன், நடிகர் மாதவன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை தழுவி “ராக்கெட்ரி” என்னும் திரைப்படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தின் கதை, இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் பிரபல நடிகர் மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சூர்யா ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த பல பிரபலங்கள் கூட மாதவனை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நபரும், நடிகர் மாதவனும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |