தனது காதலியின் தனிப்பட்ட விடியோவை காதலன் தனது நண்பர்களுடன் காட்டியதால் மாணவி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டது). இவர் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளம் மூலம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரன் அந்த மாணவியுடன் தனிப்பட்ட முறையில் இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுடன் காட்டி பெருமையை கொண்டாடியுள்ளார். இந்த விவகாரம் கல்லூரி மாணவிக்கு தெரியவந்ததால் அந்த மாணவி விக்னேஸ்வரனிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த வாலிபர் தன்னுடன் காதலை நீ தொடரவில்லை என்றால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளம் மூலமாக ஒருவரை நம்பி தன்னை ஒப்படைக்கும் அந்த பெண்கள் கடைசியில் கண்ணீர் புகார் அளிப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் திருமணத்துக்கு முன்பு எல்லை மீறி விட்டு பின்னர் ஏமாற்றப்படும் நிலையை இளம்பெண்கள் அமைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.