டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு சென்ற உகாண்டா பளுதூக்கும் வீரர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவில் 20 வயதாகும் பளு தூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதற்கிடையே உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா குறித்த பரிசோதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு செய்யப்படுகிறது.
அதன்படி வீரர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்காக அழைக்கப்பட்டபோது ஜூலியஸ் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, உகாண்டா நாட்டில் தன்னுடைய வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஆகையினால் நான் ஜப்பான் நாட்டிலேயே தங்கி வேலை செய்ய விரும்புவதாகவும் எழுதி வைத்துள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜூலியஸ் அருகிலுள்ள ரயில்வே நிலையத்தில் மத்திய ஜப்பான் செல்வதற்காக ரயில் டிக்கெட் வாங்கியது தெரியவந்துள்ளது.