Categories
சினிமா தமிழ் சினிமா

மாட்டுக்கு அட்வைஸ் செய்யும் குக் வித் கோமாளி புகழ்… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மாட்டுக்கு அட்வைஸ் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் புகழ் அண்ணன் தங்கையாக செய்யும் ரகளைகளுக்கு ரசிகர்கள் அதிகம் . இவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் புகழ் மாட்டுக்கு அட்வைஸ் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அதில் புகழ் ‘என்னப்பா தம்பி எப்படி இருக்க? மாட்டுப் பொங்கலுக்கு உனக்கு விஷ் பண்ணுனேன். நீ மதிக்காம போன.. அன்னைக்கு உனக்கு வாழைப்பழம் எல்லாம் கொடுத்தாங்க, ஆனா இன்னைக்கு பாத்தியா குப்பை மேலே ஏறி போய்க்கிட்டு இருக்க . இதுதான் வாழ்க்கை புரிஞ்சுக்கோ சரியா ?’ என்று மாட்டிடம் பேசிக்கொண்டிருக்கிறார் . ஆனால் அந்த மாடு அவரைக் கொஞ்சம் கூட மதிக்கவில்லை . புகழின் இந்த காமெடியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |