கடந்த திங்கட்கிழமை அன்று வெளியான சூரரைப்போற்று திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தீபாவளியன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூரரைப்போற்று படத்தை போலவே, பெரிய அளவிலான வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான காரணம், அந்த படத்தின் காட்சிகளும், டிரைலரும் தான். இவை இரண்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை ஒரு சிறு விமர்சனத்தின் மூலம் காணலாம். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பொறுத்த வரையில், கடவுள் மீது மக்களுக்கு பக்தி இல்லை, பயம் தான் இருக்கிறது. ஆகவேதான், மூடநம்பிக்கைகளை கண்களை மூடிக்கொண்டு மக்கள் நம்பி வருகிறார்கள் என்பதை விளக்கி, சாமியார்-சாமி யார் ? இவர்களுக்கு இடையே உள்ள அரசியல் வேறுபாட்டை அரைகுறையாக பேசுவதுதான் மூக்குத்தி அம்மன்.
“உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்” என்ற பாடலை பாடியபடி அம்மனை ஆர்ஜே பாலாஜி அலைக்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பலைகள் மட்டும் தான். அம்மன் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் வகையில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. ஆர் ஜே பாலாஜி மற்றும் அவருக்கு தாயாக நடித்த ஊர்வசியின் டைமிங், ஸ்கிரீன் ப்ரெஷண்டிங் அனைத்தும் மிக அருமையாக அமைந்தது.
இசையை பொறுத்த வரையில், படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. ஏனென்றால், படத்தில் பாபா சாமியாரின் பாடல் மட்டுமே பலருக்கு பிடித்த ஒரே ஒரு பாடலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான பெரும்பான்மையாக 6.5/10 என வழங்கப்பட்டுள்ளது.