Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகார்…. நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு‌…. கோர்ட் அதிரடி….!!!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன். இவர் சிநேகம் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி பண மோசடி செய்வதாக ஜெயலட்சுமி மீது சினேகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தார். அதோடு தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சினேகன் மற்றும் ஜெயலட்சுமி தனி தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் 2 பேரின் மீதும் வழக்குகள் பதியப்படவில்லை.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு என உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சினேகனும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி திருமங்கலம் காவல்துறையினர் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நடிகை ஜெயலட்சுமி பாஜக கட்சியின் உறுப்பினராகவும், சினேகன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |