Categories
தேசிய செய்திகள்

எனக்கு அழகான மனைவி கிடைத்து விட்டார்… உங்களுக்கு கிடைக்காத விரக்தி… திருமணமான போட்டோவை கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நபர்..!!

திருமணமான ஜோடி தங்கள் புகைப்படத்தை வெளியிட, அதை கேலி செய்த நெட்டிசன்களுக்கு மனமகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்

கொல்கத்தாவை சேர்ந்த அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், பட்டப்படிப்பை முடித்த பிறகு இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தின் பிறகு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். காரணம் மணமகன் அர்னேஷ்  அதிக அளவு உடல் பருமனுடன் இருப்பதைக்கண்டு அவர்கள் கிண்டல் செய்தனர்.

அதைப்போன்று சில இவர்களது புகைப்படத்தை உபயோகித்து மிமீஸ்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே அவ்வாறு கிண்டல் செய்தவர்களை தவறு என கண்டித்துள்ளனர். சுமார் பதினோரு வருடங்கள் காதலித்து இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் வெளியிட்ட அவர்களது புகைப்படம் இவ்வாறு கிண்டல் செய்யப்படுவைது  எக்தா கவனத்திற்கு செல்ல அவர் அந்தப் பேஜை புகார் அளிக்க முடிவு எடுத்துள்ளார். ஆனால் அர்னேஷ் புகார் எதுவும் வேண்டாம்.

எனக்கு கிடைத்ததை போன்று அழகான மனைவி அவர்களுக்கு கிடைக்காத விரக்தியில் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்து விட்டுப் போகட்டும் என மனைவியிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எக்தா கூறுகையில், “அவரை காதலிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இதுபோன்ற கிண்டல்களும் கேளிக்கைகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவரது உடலை பார்க்கும் இந்த சமூகம் அவர்களது மனதை பார்ப்பதற்கு மறந்து விடுகின்றது” என குறிப்பிட்டிருந்தார்.

இதைப் போன்று அர்ணேஷும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவர்களது புகைப்படத்தை கேலி செய்த அனைவருக்கும் நன்றி கூறியதோடு இவ்வளவு அழகான பெண் எனது மனைவி என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து அவர் எனது தோழி. இப்போது எனது மனைவி என குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |