முழுவதும் தங்கத்தால் ஆன ஹோட்டல் வியட்நாம் தலைநகரில் திறக்கப்பட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது
வியட்னாம் தலைநகரான ஹனோயில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. The Dolce Hanoi Golden Lake என பெயரிடப்பட்ட அந்த ஹோட்டலில் கைப்பிடி முதல் கழிவறை வரை முற்றிலுமாக 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. டைல்ஸ் தங்கத்தால் பதிக்கப்பட்ட இந்த ஹோட்டல் வேலைகள் முடிவடைய 11 வருடங்கள் எடுத்துள்ளது.
தங்கத்தால் இழைக்கப்பட்ட ஹோட்டல் என்றால் இதுவே உலக அளவில் முதல் ஹோட்டல் ஆகும். 25 மாடிகள் 400 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்க வேண்டும் என்றால் 23,305 ரூபாய் கட்டணமாக கொடுக்க வேண்டும். அதோடு இந்த ஹோட்டலில் இருக்கும் அடுத்த குடியிருப்புக்கான வாடகை ஒரு சதுர மீட்டருக்கு 4,84,745 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.