Categories
அரசியல்

ADMK உண்ணாவிரதப் போராட்டத்தில் lunch & tea break : தெறிக்க விட்ட செந்தில் பாலாஜி

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்களும் இருக்கிறோம்னு இருப்பை காட்டக் கூடிய வகையில்,  சில பேர் போராட்ட களம் என்று சொன்னார்கள்… அப்புறம் லஞ்ச் பிரேக் என்ற ஒரு செய்தி சோசியல் மீடியாவுல வந்தது. உண்ணாவிரத போராட்டம் என்று  சொன்னாங்களே… கடைசில லஞ்ச் பிரேக்  என்று வருதுன்னு பார்த்தேன்.

ஒரு 2 மணி நேரம் கழிச்சு டீ பிரேக் என்று ஒரு செய்தி வந்துச்சு. 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் கண் அயராமல் உழைக்கின்ற முதலமைச்சரை நாம் பெற்றிருக்கின்றோம், தமிழகம் பெற்று இருக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக நம்முடைய தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் செயல்பாட்டால் இன்றைக்கு முதல் இடத்தை பெற்றிருக்கிறார் என்று சொன்னால் இதை விட சான்று வேறு யார் வழங்கிட முடியும்.

கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை.  இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில்,  நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய  இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள்.

இந்த நகரப்புறத்தினுடைய உள்ளாட்சி தேர்தலை வெற்றியை தொடர்ந்து…  வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில்….  கோவையில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளும்,  மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை உதயசூரியன் பெற்று மகத்தான வெற்றியை கழகத் தலைவர்கள் அவர்கள் அறிவிக்கின்ற வேட்பாளருக்கு வழங்க வேண்டும் என்பதற்கான பணிகளை நாம் தொடங்கி இருக்கின்றோம்,  நம் மக்களும் தயாராக இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |