தலை முதல் கால் வரை உள்ள மச்சகளின் பலன்களைப் பற்றி பார்ப்போம்.
“நெற்றியின் நடுப்பகுதியில் உள்ள மச்சம் அதிகாரமிகுந்த பதவியில் அமர்வார்கள், ஆடம்பரமான வாழ்வு, வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை, ஆனால் நேர்மையுடன் வாழ்வர்.
இடது தாடையில் மச்சம் இருந்தால் வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பர், இதனால் எதிர் பாலினத்தவர்கள் எளிதாக காதல் வலையில் வீழ்வர், நற்குணமுடையவர்கள்.
வலது தாடையில் மச்சம் – பிறரால் வெறுக்கப்படுவார்கள், கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும்.
காதில் மச்சம் – இவர்கள் செலவு செய்வதில் கெட்டிக்காரர்கள், சமுதாயத்தில் தனி மதிப்பு இவர்களுக்கு உண்டு.
நாக்கு பகுதியில் மச்சம் – அதிக கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பர், ரசனை அதிகமாக இருக்கும்.
முதுகில் மச்சம் – துணிச்சல் குணம் அதிகமாக இருக்கும் , ஆரோக்கியம் மற்றும் வசதியான வாழ்க்கை வாழ்வர்.
தொடையில் மச்சம் – இடது தொடையில் மச்சம் இருந்தால் கஷ்டப்பட்டு வாழ்வில் நல்ல நிலைக்கு வருவர். வலது தொடையில் மச்சம் இருந்தால் தற்பெருமையும், அடங்காபிடாரித்தனமும் இருக்கும்.
இடது முழங்காலில் மச்சம் – புத்தி கூர்மையுடையவர்கள், அதிக தன்னம்பிக்கை உடையவர்கள். வலது முழங்காலில் இருந்தால் பிடிவாதக்காரர்களாக இருப்பர்.
இடது பக்க மார்பகத்தில் மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவர், வலது பக்கம் இருந்தால் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.
தலைபகுதியில் எந்த இடத்தில் மச்சம் இருந்தாலும் பொறாமை, பேராசை அதிகம் இருக்கும். எனவே மன நிறைவு இருக்காது.
மூக்கு மீது மச்சம் இருந்தால் அதிஷ்டசாலி, ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து, சமூகத்தில் மதிப்பு இருக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் இனிமையான குணம் உடையவர்கள், சிறந்த நிர்வாகியாக இருப்பர்.
இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும். வலது கன்னத்தில் இருந்தால் வறுமை வாட்டும்.” – மச்சங்களின் பலன்கள் –