நபர் ஒருவர் ஓரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஹர்புதீன் (46) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புறம்போக்கு நிலத்தில் சிறிய வீட்டை கட்டி தான் வசித்து வந்துள்ளார். வளைகுடா நாட்டில் செய்த வேலை செய்த பிறகு இந்தியாவிற்கு வந்த இவர் தன் குடும்பத்தை ஓட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ளார். மேலும் கொரோனாவும் வந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். இதையடுத்து தற்போது இவருக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளததால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
லாட்டரி சீட்டு கடை நடத்தி வந்த அவருக்கு வியாபாரம் ஆகாத லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதன் மூலம் சொந்த வீடு கட்டி, கடன்களை அடைத்துவிட்டு சிறு தொழில் தொடங்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்துக்கு சென்று தன்னுடைய லாட்டரி சீட்டினை சமர்ப்பித்துள்ளார். விதிமுறைப்படி லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் மட்டுமே பரிசினை பெற முடியும். ஆனால் விற்பனையாகாமல் இருந்த சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.