Categories
உலக செய்திகள்

தவறுதலாக லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்தது லக்… எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் தெரியாமல் லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணிற்கு 1.4 மில்லியன் டாலர் பரிசு விழுந்து கோடீஸ்வரி ஆக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கேன்பெராவை சேர்ந்த இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இவ்விருவரும் வாரம் வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள். ஒரு வாரம் ஒரு பெண் வாங்கினால் மற்றொரு வாரம் அவரது  தோழி வாங்குவது இவர்களிடையே வழக்கம். இச்சூழலில் தோழி வாங்கவேண்டிய வாரத்தில் தவறுதலாக இந்தப் பெண் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார்.

ஆனால் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 1.4 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “எனது தோழிக்கு பதிலாக நான் லாட்டரி டிக்கெட் தவறாக வாங்கிவிட்டேன். ஆனால் நான் செய்த தவறுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. எப்படியோ நான் லாட்டரி டிக்கெட் வாங்கி பரிசு விழுந்ததற்கு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பரிசுத்தொகையை எனது தோழியும் நானும் பகிர்ந்து எடுத்துக் கொள்வோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |