பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருவதாக என்ஐஏ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தி ஐலேண்ட் செய்தி தாளில் வந்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் சட்ட விரோத போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வழக்கு தொடர்பாக 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்யும் ஹாஜி சலீம் என்பவருடன் இணைந்து புஷ்பராஜ் மற்றும் குணசேகரன் ஆகியோர் இலங்கையில் போதை பொருட்களை கடத்தியுள்ளனர் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டும் நடந்துள்ளது. மேலும் தமிழக மற்றும் இலங்கையின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பு முயற்சி செய்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.