மத்திய அரசு நம் நாட்டிலுள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காகதான் இந்த LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு தரப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் எடை 14.2 கிலோ ஆகும். மத்திய அரசானது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி சிலிண்டர் பெறும்போது முழு தொகையும் பெறப்படும்.
இதனையடுத்து அதற்கான மானிய தொகை வங்கி கணக்குகளில் வழங்கப்படும். இந்த மானிய தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இந்த நடைமுறை கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் கொரோனா தொற்று காலங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு ரூபாய் 1,000 வரை கொடுத்து மக்கள் சிலிண்டர் வாங்கி கொண்டிருக்கின்றனர். இதனிடையில் பல்வேறு இடங்களில் சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து குடும்பத் தலைவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் சிலிண்டர் விலை குறையவில்லை மற்றும் சிலிண்டர் வாங்குவதற்கான மானியமும் மக்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை.
இதற்கிடையில் மத்திய அரசானது நிரந்தரமாக சிலிண்டர் மானியத்தை நிறுத்துவதாக தகவல் வெளியாகியது. அதன்படி கடந்த மாதம் சில பேருக்கு மானியம் வந்தது எனவும் பல நபர்களுக்கு மானியம் வரவில்லை எனவும் குற்றச்சாட்டு பெறப்பட்டது. அது தொடர்பாக விசாரித்தபோது சிலிண்டர் கணக்கில் ஆதார் கார்டு இணைக்காவிட்டால் மானியம் வராது மற்றும் ஆதார் தான் மானியம் வாங்குவதற்கு முக்கியமான ஆவணமாகும். அதேபோன்று குடும்பத்தின் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பான தகவலுக்கு அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு சென்று விரிவான தெரிந்து கொள்ளலாம்.