காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரையப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக சுப்பிரமணியும், சர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.
இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.