Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் மனைவி கர்ப்பத்தை கலைத்து விட்டு…. வேறு பெண்ணை திருமணம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை கர்ப்பமாக்கி கலைத்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பக்கத்திலுள்ள கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்(32). இவர் திண்டிவனம் பகுதியில் வசிக்கும் மஞ்சுளா (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2010 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷுக்கு சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால் மனைவியை அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே விட்டு விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளா கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து திண்டிவனம் வந்த ராஜேஷ் தனது மனைவிக்கு கருத்தடை மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் கடந்த 2014ஆம் வருடம் மனைவியுடன் சென்னைக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அப்போது வேலைக்கு சென்ற இடத்தில் ராஜேஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டால் மனைவியை பெற்றோர் வீட்டிலேயே கொண்டு விட்டு விட்டு வந்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்தவர் அந்தப் பெண் திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் மஞ்சுளாவுக்கு தெரியவந்ததும் உடனே சென்னைக்கு வந்து தன்னுடைய கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அது ஒரு ராஜேஷ் மஞ்சுளாவின் சாதிப்பெயரை சொல்லி திட்டி திண்டிவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதனால் வேதனை அடைந்த மஞ்சுளா தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதையடுத்து அனைத்து சாட்சியங்களும் நிரூபணமான நிலையில் ராஜேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஆயிரம் அபராதத்தையும், மஞ்சுளாவுக்கு இரண்டு லட்சம் இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |