Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலில் புரிதல், விட்டுக் கொடுத்தல் வேண்டும்”…. அது எளிது அல்ல…. விவாகரத்து குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்…..!!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் நடித்த தெய்வமகள் சீரியல் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார். இவர் நடிகர் பரத்தின் 50-வது படமான லவ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்பாக பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான மிரள் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லவ் திரைப்படத்தின் நாயகி வாணி போஜன் சமீபத்தில் கொடுத்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, காதலித்து திருமணம் செய்து கொண்டால் மட்டும் போதாது.

திருமணத்திற்கு பிறகும் காதலிக்க வேண்டும். அதன் பிறகு ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் திரைப்படம் தான் லவ் என்று கூறினார். அதன் பிறகு விவாகரத்துகள் அதிக அளவில் நடப்பதற்கான காரணம் குறித்து வாணி போஜனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு விவாகரத்துகள் அதிக அளவில் நடப்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் என்றார். இதனையடுத்து சுதந்திரம் மற்றும் சுயசார்பு தற்போது இல்லாததோடு சுயநலமும் அதிகரித்து விட்டது.  காதல் என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. புரிதல் மற்றும் விட்டுக் கொடுத்தல் தான் காதல். மேலும் முதலில் குடும்பத்தையும், பின் உறவினர்களையும் காதலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |