ஆந்திர மாநிலத்தில் தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞனை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அவர் தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை துள்ளார்.
இதையடுத்து அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.