ஈரோட்டில் மணமகனை தாக்கிவிட்டு மணமகளை கடத்தல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மற்றும் இளமதி. ஒரே நிறுவனத்தில் பணி செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இருவரும் மாற்று சமுதாயம் என்பதால் இருவரின் பெற்றோர்கள் எதிர்ப்பு இருந்ததால் செல்வன் ஈஸ்வரன் என்பவரின் உதவியை நாடினார். பின்னர் அங்குள்ள கொளத்தூரின் குளக்கரை பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது.
இதனையடுத்து நேற்று மாலை புதுமணத் தம்பதியர் செல்வம் மற்றும் இளமதி மற்றொரு நண்பரை சந்திப்பதற்கா புறப்பட்டு சென்றார்.இதனிடையே ஐந்துக்கு மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 40 பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்த ஈஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மணமகன் செல்வத்தையும் தாக்கிவிட்டு இளமதியை கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான ஈஸ்வரன் கொளத்தூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்துள்ள அடிப்படையில் கும்பலாக வந்தவர்களின் வாகனத்தில் கட்சிக்கொடி கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட இளம்பெண் இளம் அது எங்கே இருக்கிறார் ? என்பதை காவல்துறைவிசாரித்து வருகின்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.