காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அருள்புரம் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற ஒரு வயதில் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவன் திட்டியதால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்த வரதராஜன் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.