ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர்
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இருவரும் சந்திக்க முடியாத சூழலில் இருந்து வந்துள்ளனர். பின்னர் இந்தப் பிரிவிற்கு முடிவுகட்ட நினைத்தவர்கள் பூட்டிக்கிடந்த வழிவிடு வேல்முருகன் கோவில் முன்பாக திருமணம் செய்துகொண்டு கோட்டை மகளிர் காவல் நிலையம் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களது குடும்பத்தாரை வரவழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். திருமணம் செய்துகொண்ட இருவரும் மேஜர் என்பதால் இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது. இதனைத்தொடர்ந்து பல நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் புதுமண ஜோடி வீடு திரும்பியது. இணையதளத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.