ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புதன்கிழமை காலை, தர்மவாரத்தின் புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வயலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணையில் ஸ்நேகலதாவின் பெற்றோர் ராஜேஷ், கார்த்திக் என்ற இரு இளைஞர்களை துரத்தி சென்று கொலை செய்து தீ வைத்து எரித்து உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலைக்கு பின்னால் இருப்பவர்கள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் த.தே.கூ ரோகேஷ் கோரினார். அதேநேரத்தில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் ஆளும் அரசாங்கம் செயலற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.