Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5யில் உருவாகும் அன்பு கூட்டணி…. அர்ச்சனாவை காப்பி அடிக்கும் பிரபலம்…. ரசிகர்கள் கருத்து….!!

பிக்பாஸ் 5 யில் அன்பு கூட்டணி உருவாகி வருவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்5. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கமல்ஹாசன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டியாளர்களுடன் உரையாடுவார். பிக்பாஸில் இன்னும் எலிமினேஷன் தொடங்கவில்லை. இதனால் கமல்ஹாசன் இனிதான் வீட்டிற்குள் சலசலப்புகளும், சண்டைகளும் நிகழும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று கூறினார்.

சூப்பர் சிங்கருக்கு ஷிவாங்கி, ஸ்டார்ட் மியூசிக்குக்கு மாகாபா... அப்ப  பிரியங்கா `பிக்பாஸ்' என்ட்ரியா? | VJ Priyanka might be entering Bigg Boss  Tamil Season 5

 

இதற்கு ரசிகர்கள் பலர் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது என்று கூறி பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர். கடந்த சீசனில் அர்ச்சனாவுடன் ரியோ, நிஷா ஆகியோர் இருந்ததுபோல இந்த சீசனில் பிரியங்காவுடன் தாமரைச்செல்வி, அபிஷேக் ஆகியோர் அன்பு  கூட்டணியாக உருவாகியுள்ளனர். கடந்த  சீசனில் அர்ச்சனா செய்த தவறை பிரியங்கா செய்ய வேண்டாம் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |