சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள சித்தலவாய் என்ற பகுதியில் ஐயப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் போலீஸார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக ஐயப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.