கன்னியாகுமரி அருகே பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடமிருந்து 10 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சபிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு பேஸ்புக் மூலம் ஜோஸ் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனக்கு அவசரமாக பணம் தேவைப் படுவதாக கூறியிருக்கிறார் ஜோஸ்.
அவரின் பேச்சை நம்பிய சபிதா தன்னிடமிருந்த 10 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கவரிங் கடைக்கு சென்று கவரிங் நகைகளை வாங்கி சபிதாவிற்கு கொடுத்துள்ளார். பின்னர் சபிதாவை பேருந்து நிலையத்தில் காக்க வைத்துவிட்டு ஜோஸ் மாயமானதாக கூறப்படுகிறது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் சபிதா. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட இளைஞனை தேடி வருகின்றனர்