பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் புதிய படத்தில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் டிவி தொலைக் காட்சியின் மூலமாக பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இப்போது இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயாகியாக அறிமுகமாக உள்ளார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நண்பர்கள் தினமான இன்று லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் லாஸ்லியா, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ், KPY பாலா போன்றோர் இடம்பெற்றுவுள்ளனர்.