Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகள்…. உடைந்து விழுந்த மின்கம்பம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரசியதால் மின்கம்பம் உடைந்து விழுந்துவிட்டது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானுர் பகுதியில் அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் அதிகப்படியான மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஆவுடையாரில் இருக்கும் மின்கம்பம் மீது உரசிவிட்டது. இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின் வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை துண்டித்தனர்.

இதனையடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி அந்த இடத்தில் புதிதாக மின் கம்பத்தை நட்டு மின் விநியோகத்தை சரி செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மின் வயர்கள் இருக்கிறதா என்று கவனமாக பார்த்து வர வேண்டும் எனவும், அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |