மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 43 வயதான ஸ்ரீநாத் என்பவர் உதிரிபாகங்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி வழியாக சென்றுள்ளார்.
இந்த நிலையில் தீடிரென எதிரே வந்த லாரி அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.