Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வயலு போச்சே…. ரோடு தப்பா…? லாரி தப்பா…? டீ குடிக்கப் போன கேப்பில் நடந்த சம்பவம்….!!

ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி பாரம் தங்காமல் வயலில் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியில் ஆலத்தம்பாடி மெயின் ரோட்டில் சாலை அமைப்பதற்காக கரூரில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு கரும்பிளியுறுக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது லாரியின் பாரம் தாங்காமல் சாலையோரத்தில் இருந்த ரோடு உடைந்து லாரி வயலில் கவிழ்ந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து வயலில் கவிழ்ந்த லாரியை மீட்பதற்காக கிரேன் கொண்டுவரப்பட்டது. கிரேன் உதவியால் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வயலில் லாரி கவிழ்ந்த போது லாரியில் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Categories

Tech |