Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்க போனான்னு தெரியல… ஒன்றாக சுற்றிய லாரி டிரைவர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆசை வார்த்தைகள் கூறி லாரி டிரைவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமி காணாமல் போனதால் துடியலூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் லாரி டிரைவரான கோகுல் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் பகுதியில் சுற்றி திரிந்த கோகுலையும், அந்த சிறுமியையும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்டனர். அதன் பின் கோகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |