Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… நேருக்கு நேர் மோதிக் கொண்ட லாரிகள்… பாதிக்கப்பட்ட சாலை போக்குவரத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆளவந்தான் குளம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லையில் இருந்து லாரியில் குளிர்பானங்களை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டு உள்ளார். இதேபோன்று உச்சம் பாறை பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி லாரியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு லாரிகளும் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பரமேஸ்வரன் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தில் மற்றொரு டிரைவர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த சாலையில் போலீசார் போக்குவரத்தை சரி செய்த பிறகு வாகனங்கள் சென்றதுள்ளது. மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |