Categories
அரசியல்

தினமும் என்னோட கனவுல கிருஷ்ணர் வராரு…. என்ன சொல்றாரு தெரியுமா…? அகிலேஷ் யாதவ் வேற லெவல் பேச்சு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர், கடவுள் கிருஷ்ணர் தன் கனவில் தினந்தோறும் வருவதாக கூறியிருக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியிருப்பதாவது, “கடவுள் கிருஷ்ணர், தினந்தோறும் என் கனவில் வருகிறார். என் தலைமையில் தான் உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமையுமென்று கூறுகிறார்.

மேலும், யோகி ஆதித்யநாத்-ன் ஆட்சி நம் மாநிலத்தை தோல்வியடைய செய்துவிட்டது என்றும்  கிருஷ்ணர் கூறுகிறார். பாஜக, நம் கட்சி அதிகமான குற்றங்கள் செய்ததாக கூறுகிறது. ஆனால் அதிகமான குற்றங்களை செய்து வழக்குகளை சந்தித்த யோகி ஆதித்ய நாத்-ஐ தான் அக்கட்சி முதல்வராக்கியுள்ளது.

அவர்கள் கட்சியில் இருக்கும் குற்றவாளிகளைத் சுத்தம் செய்ய, பாஜக சலவை இயந்திரத்தை எடுத்து வரவேண்டும். பாஜகவில் பல தலைவர்கள், அவர்களின் இரத்தத்தை சிந்தி கட்சியை வளர்த்திருக்கிறார்கள். ஆனால் எங்கேயோ இருந்து வந்து யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆகியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |