Categories
தேசிய செய்திகள்

உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

உலக புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு யாத்திரை நடத்த ஒப்புக்கொண்டால் நிச்சயமாக கடவுள் ஜெகநாத் எங்களை மன்னிக்கமாட்டார் வச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகன்நாத் ரத்த யாத்திரையை வரும் 23ம் தேதி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு நலனுக்காக, ஒரிசாவின் பூரியில் இந்த ஆண்டு ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தேர் விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜெகந்நாத் பூரி ராத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 முதல் தொடங்கப்படும். கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் ரதங்கள் கிராண்ட் ரோட்டில் ஜெகந்நாத் கோயிலிலிருந்து குண்டிச்சா கோயிலுக்கு 2.5 கி.மீ தூரத்திற்கு இழுக்கப்படுவது வழக்கம்.

இந்த விழாவில் கலந்துகொள்ள ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரை நகரமான பூரிக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |