Categories
தேசிய செய்திகள்

50 வயது அம்மா…. ட்விட்டரில் மாப்பிளை தேடும் மகள்… வைரல் பதிவு..!!

‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர்.

Image result for #Groomhunting

ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். ஆஸ்தா வர்மா என்ற இளம்பெண் ட்விட்டரில், தனது அம்மாவுக்கு மாப்பிள்ளை வேணும் என பகிர்ந்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

View image on Twitter

அந்த ட்விட்டர் பதிவில்,” எனது அம்மாவுக்கு ஒரு சைவ, குடிப்பழக்கம் இல்லாத, 50 வயது ஹேண்ட்சம் மணமகனைத் தேடுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பலரும் உனது அம்மாவுக்குச் சீக்கிரம் மாப்பிள்ளை கிடைக்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்திருந்தனர். ஆஸ்தாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.

https://twitter.com/AasthaVarma/status/1189915673897529345

Categories

Tech |