நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அதிமுக மக்களை ஏமாற்றி வருகின்றது என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஏழு மாதங்கள் கழித்து அந்த ஒரு மசோதா தமிழகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த விஷயம் நீதிமன்றத்துக்குச் சென்று தான் நாம் எல்லாருக்கும் தெரியும். சொல்லப்போனால் மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் 23 மாதங்கள் கழித்துதான் நமக்கே தெரியும். மக்களிடம் அதிமுக அரசு மறைத்துள்ளது.
நான் தமிழக சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினேன். அப்போது சட்டத்துறை அமைச்சர் இதை ஒப்புக் கொண்டார். மேலும் நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம், அதை சட்ட ரீதியாக அதை எதிர்த்து தீருவோம் என்பதை சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு தற்போது வரை நீட்டை அதிமுக எதிர்க்கவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், என்னிடம் இருப்பது அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் அதில் நீட் தகுதித்தேர்வை அதிமுக எதிர்க்கிறது என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதேபோல அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு நீட் தேர்வு ரத்து செய்வோம் எனவும் அதிமுக சொல்லி உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் தற்போது வரை நீட்டை எதிர்த்து போராடும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை, மக்களை ஏமாற்றுகிறது என்று மு க ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக தீர்மான அறிக்கை, தேர்தல் அறிக்கையை கையில் ஆதாரமாக வைத்துக்கொண்டு முக.ஸ்டாலின் பேசியது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.