Categories
உலக செய்திகள்

இருதரப்பினருக்கு இடையே மோதல்… லண்டனில் பலியான இந்தியர்கள்..!!

இங்கிலாந்தில் இரு குழுவினருக்கு இடையே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேரும்  இந்தியர்கள் என லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் இரண்டு குவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாள் மற்றும் கத்திகளுடன் வெட்டிக்கொண்டு பயங்கரமாக சண்டை போட்டு கொண்டனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் இறந்து விட்டனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் பெயர் நரேந்திர சிங் லுபாயா, ஹரீந்தர் குமார் மற்றும் மல்கித் சிங் தில்லான் என்ற பால்ஜிந்தர் சிங் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது பலியானவர்களின் உடல்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குர்ஜித் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |