Categories
உலக செய்திகள்

“இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க”… கொத்து கொத்தா மக்கள் இறந்து போயிருவாங்க… எச்சரித்த அறிவியலாளர்….!!

கொரோனா பரவல் குறைவதற்கு முன்பே ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ளவது நல்லதல்ல என்று லண்டன் அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளராக உள்ளவர் பேராசிரியர் Azra Ghani. பிரிட்டனில்  கொரோனாவுக்கு  எதிராக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளக் கூடாது, அப்படி விலக்கிக் கொண்டால் 2021 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என்று Azra Ghani கூறியுள்ளார்.

பிரிட்டனில் பிப்ரவரி 22ம் தேதியில் இருந்து ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  Azra Ghani- யின் இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது. பிரிட்டனில் பொதுமக்கள் தடுப்பூசி போடும் வரையிலாவது  ஊரடங்கை விலக்காமல் இருப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் என்பது ஒரு  கொடிய வைரஸ். அது புதிதாக உருமாற்றம் அடைந்து வருகிறது. அது முன்பை விட தற்போது  அதிக அளவு பரவும் தன்மை கொண்டது. இதற்கிடையில் சில பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள தயங்குகின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையில் ஊரடங்கை  முழுமையாக விலக்குவது மேலும் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று Azra Ghani எச்சரித்துள்ளார்.

Categories

Tech |