Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்…. விவசாயத்திற்கு பேராபத்து!!

பாகிஸ்தானில் இருந்து படையெடுத்த வெட்டுக்கிளிகள் வடமாநிலமான ராஜஸ்தானிற்குள் நுழைந்தது.

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளும் அவை ஊடுருவியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய வேளாண் துறை இயக்குநர் வி.கே. சர்மா கூறியதாவது, ” வெட்டு கிளிகள் அஜ்மீர் மாவட்டத்தைத் தாக்கியது.

மேலும் இந்த வெட்டுக்கிளிகள் நாகூரிலிருந்து அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைத்த போது, தீயணைப்புத் துறையின் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணிகளை மேற்கொண்டோம், இதன் காரணமாக அதனை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது. வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு 3- லிருந்து 5% வரை சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |