இங்கிலாந்து நாட்டில் நேற்று முதல் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில், நேற்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கக்கூடிய விடுதிகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், மதுபான விடுதிகள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் 6 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரங்குகளின் உள்பகுதியில் 30 நபர்களும், வெளி அரங்குகளில் 50 நபர்களும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்திய பின் மேலும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.