ஆஸ்திரிய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வீட்டிலேயே லாக்டவுனில் வைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.
ஆஸ்திரியாவின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. இதில் 65% சதவீத மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தாத நபர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவ விடாமல் தடுக்க அவர்களை வீட்டில் லாக் டவுனில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி தடுப்பூசி செலுத்தாத 12 வயதுக்கு அதிகமான நபர்கள் அல்லது சமீபத்தில் கொரோனா ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியாதவர்கள், இனிமேல் தேவையற்ற காரணங்களுக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாது. விரைவில் காவல்துறையினரின் உதவியோடு இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதியை மீறினால் 570 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.