Categories
உலக செய்திகள்

இன்று இரவு 8 மணியிலிருந்து…. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு…. அதிபர் அறிவிப்பு…!!!

இலங்கையில் இன்று இரவு எட்டு மணியிலிருந்து ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவலுக்கு பின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கையில் பல வன்முறைகள் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்தது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

எனினும் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு நேற்று ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், போராட்டங்கள் தொடர்வதால் இன்று இரவு எட்டு மணியிலிருந்து நாளை காலை 5 மணி வரைக்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.

Categories

Tech |