Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் கவலை இல்லை… விதிமுறையை மீறக்கூடாது… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பொதுமக்களுக்கு தெருக்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதியிலுள்ள மளிகை கடை வியாபாரிகள் அவர்களது வாகனங்களை பயன்படுத்தி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வது குறித்து காவல் துறையினர் உள்ளாட்சித்துறை மற்றும் வணிகர்களுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது, சேலம் மாவட்டத்திலுள்ள வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை சில்லறை வணிகர்களுக்கு மளிகைப் பொருட்களை வினியோகம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வணிகர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யலாம் என்று கூறியுள்ளார். இந்த மளிகை பொருட்கள் விற்பனையின் போது அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |