Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் தலிபான்கள்…. வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை…. அறிக்கை வெளியிட்ட ஆப்கனிஸ்தான்….!!

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் வன்முறையை கட்டுப்படுத்த சுமார் 31 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அந்நாட்டு அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருக்கிறார்கள். இவர்களுடைய வன்முறை செயல்களை கட்டுக்குள் கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால் இந்த இரவு நேர ஊரடங்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களில் 31 மாவட்டங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள 3 மாவட்டங்களுக்கு இந்த இரவு நேர ஊரடங்கு என்னும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. இந்த தகவலை ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

Categories

Tech |